திருவாடானையில் கருணாஸ் கார் மீது காலணி வீச்சு

Webdunia
ஞாயிறு, 26 பிப்ரவரி 2017 (15:06 IST)
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் சனிக்கிழமை சட்டப் பேரவை உறுப்பினர் கருணாஸ் வாகனம் மீது காலணி வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


 

 
அதிமுக எம்.எ.ல்.ஏ. கருணாஸ் வெள்ளிக்கிழமை தேவர் சிலைக்கு மாலை சென்றபோது, ஓ.பி.எஸ். மற்றும் தீபா ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர் மாலை அணிவிக்காமல் திரும்பிவிட்டார்.
 
இதை அறிந்த தீபா, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான அரசூர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் தலைமையில் பலர் கருப்புக் கொடியுடன் அங்கு திரண்டனர். தகவலறிந்த திருவாடானை போலீஸார் அவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
 
அப்போது அவ்வழியாக வந்த நடிகர் கருணாஸ் வாகனம் மீது ஓ.பி.எஸ்.யின் ஆதரவாளர்கள் காலணிகளை வீசி எறிந்தனர். இதுகுறித்து கருணாஸ் திருவாடானை காவல்துறையில் புகார் அளித்தார். பின்னர் அவர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்தார். இச்சமயத்தில் அங்கிருந்த ஒருதரப்பினர் அவருக்கு எதிராக கோஷமிட்டதுடன், தகாத வார்த்தைகளால் பேசினராம். 
அடுத்த கட்டுரையில்