நான் யார் தெரியுமா? குழந்தையிடம் கேட்ட கருணாநிதி - வைரல் வீடியோ

Webdunia
புதன், 28 மார்ச் 2018 (16:39 IST)
திமுக நிர்வாகி ஒருவரின் குழந்தையுடன் திமுக தலைவர் கருணாநிதி உரையாடிய வீடியோ சமூக வளைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 
வயோதிகம்  மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக கலைஞர் கருணாநிதி தற்போது தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதோடு, முழு ஓய்வில் இருக்கிறார். சளித்தொந்தரவு காரணமாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படாமல் இருக்க அவரது தொண்டையில் டிராக்கியாஸ்டமி கருவி பொருத்தியிருப்பதால் அவரால் பேச முடியவில்லை. 
 
அந்நிலையில், அரசியல் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் அவரை அவ்வப்போது அவரை சந்தித்து ஆசி பெற்று வருகின்றனர். 
 
இந்நிலையில், சமீபத்தில் ஒரு திமுக நிர்வாகி தனது குடும்பத்துடன் கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றார். அப்போது, அவர்களின் குழந்தையிடம் ‘நான் யார் தெரியுமா?’ என சைகையில் கேட்க, அக்குழந்தை ‘ கலைஞர் கருணாநிதி’ என பதில் கூறு, அக்குழந்தைக்கு கருணாநிதி கை கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
 
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்