அந்நிலையில், வழக்கறிஞர் ராமசாமி என்பவரை மார்ச் 26-ம் தேதி சசிகலா புஷ்பா திருமணம் செய்து கொள்வதாக சமூகவலைத்தளங்களில் ஒரு அழைப்பிதழ் பரவியது. ஆனால், சசிகலா புஷ்பா தரப்பில் எந்த விளக்கும் கொடுக்கப்படவில்லை. ஒருபக்கம், அவர் திருமணம் செய்து கொள்ளும் ராமசாமியின் முதல் மனைவி சத்யபிரியா நீதிமன்றத்தில் முறையிட்டார். எனவே, திருமணத்திற்கு நீதிமன்றம் தடை விதித்தது. எனவே, திருமணம் நடைபெறுமா என்கிற சந்தேகம் எழுந்தது.