மதமென பிரிந்தது போதும்.. மும்மதத்தினர் கட்டிய சமத்துவ பள்ளிவாசல்!

Webdunia
திங்கள், 19 டிசம்பர் 2022 (14:36 IST)
காரைக்குடியில் மத பாகுபாடுகளை களையும் விதமாக மூன்று மதத்தினர் இணைந்து கட்டியுள்ள பள்ளிவாசல் வரவேற்பை பெற்றுள்ளது.

காரைக்குடி அருகே உள்ள பனங்குடி என்ற கிராமத்தில் இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த மக்கள் பலர் வசித்து வருகின்றனர். அக்கிராமத்தில் அதிகமாக இந்து மக்கள் இருந்தாலும் இஸ்லாமிய மக்களுக்கு பள்ளிவாசல் ஒன்று நீண்ட காலமாக இருந்து வருகிறது.

அந்த கிராமத்தில் இருந்த அந்த பள்ளிவாசல் சிதிலமடைந்திருந்த நிலையில் அதை சீர்செய்யும் நடவடிக்கை குறித்து ஜமாத் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் அப்பகுதியை சேர்ந்த இந்து, கிறிஸ்தவ மக்களும் கலந்து கொண்ட நிலையில் அனைவரும் சேர்ந்து பள்ளிவாசலை சீரமைக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்பேரில் ஒவ்வொரு வீட்டிலும் வரி வசூல் செய்து சுமார் ரூ.1.50 கோடி ரூபாய் செலவில் பள்ளிவாசல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழாவில் அனைத்து மத மக்களும் ஏற்றதாழ்வின்றி கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர். மத பாகுபாடுகளை கடந்த கிராம மக்களின் செயல் பாராட்டை பெற்றுள்ளது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்