வேறு நபருடன் திருமணம்.. காதலியை 6 துண்டுகளாக வெட்டிய காதலன்!

திங்கள், 21 நவம்பர் 2022 (21:06 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் தன் காதலி வேறு நபரை திருமணம் செய்து கொண்டதால், அவரை 6 துண்டுகளாக காதலன் வெட்டிக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில், டெல்லியில் அஃப்தாப் என்ற யூடியூபர், தன லிவ் இன் உறவின் இருந்த தன் காதலுயை 35 துண்டுகளாக வெட்டிக் கொன்ற சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதேபோல் உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

உத்தரபிரதேச மா நிலத்தைச் சேர்ந்தவர் பினிஸ் யாதவ். இவர், அசம்கர் மாவட்டத்தில் உள்ள இஷாக் பூர் கிராமத்தைச் சேர்ந்த ஆராதனா என்ற பெண்ணை  காதலித்து வந்த நிலையில், அப்பெண் வேறொரு நபரை திருமணம் செய்து கொண்டார்.

இதனால், ஆராதனா மீது பிரின்ஸ் ஆத்திரத்தில் இருந்துள்ளார், இருப்பினும் அவர் ஆராதனாவுடன் அவர் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பிரின்ஸ் யாதவ், தன் குடும்பத்தினர், உதவியுடம்ன், ஆராதனாவைக் கொல்லத் திட்டமிட்டு,  கடந்த நவம்பர் 9 ஆம் தேதி ஆராதனாவை தன பைக்கில் கூட்டிச் சென்று, , ஒரு கரும்பு தோட்டத்தில் வைத்து, அவரைக் கொலை செய்துள்ளார்.

அதன்பின்னர், அவரது உடலை 6 துண்டுகளாக வெட்டி,  ஒரு கிணற்றில் வீசியுள்ளார்.  கடந்த  நவம்பர் 15 ஆம்ட்  தேதி உள்ளூரைச் சேர்ந்தவர்கள்  கிணற்றில் ஒஎர் பெண் சடலம் இருப்பதாக போலீஸுக்கு தகவல் தெரிவித்தனர்.

ALSO READ: காதலியின் உடலை 35 துண்டுகளாக வெட்டி வீசிய காதலன் கைது!
 
இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்து, பிரின்ஸை அழைத்து கொண்டு சம்பவ இடத்திற்குச் சென்றபோது, பிரின்ஸின் உறவினர்கள், போலீஸை  நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர், பதிலுக்கு போலீஸும் துப்பாக்கியால் சுட்டனர். இதில் பிரின்ஸுக்கு காயம் ஏற்பட்டதாகவும், அவரது குடும்ப உறுப்பினர்கள் தலைமறைவாகியுள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

 
Edited by Sinoj

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்