ரூ.1000 பொங்கல் பரிசு: தமிழக அரசுக்கு கனிமொழி பாராட்டு

Webdunia
வெள்ளி, 18 ஜனவரி 2019 (21:41 IST)
பொங்கல் பரிசாக தமிழக அரசு அனைத்து ரேசன் கார்டு உள்ளவர்களுக்கு ரூ.1000 அளித்தது. பின்னர் நீதிமன்றத்தின் ஆணை காரணமாக வெள்ளை அட்டை வைத்திருப்பவர்கள் தவிர மற்ற கார்டுதாரர்களுக்கு அளிக்கப்பட்டது.

பொங்கல் பரிசாக வாங்கிய ரூ.1000ஐ ஒருசிலர் மதுக்கடைகளில் மதுவாங்கி குடித்திருந்தாலும் பெரும்பாலான மக்கள் இந்த பணத்தை பொங்கல் கொண்டாட்டத்திற்கு பயன்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது. இந்த ஆண்டு பொங்கல் களைகட்டியதே இதற்கு சான்று

இந்த நிலையில் ரூ.1000 பணமாக பொங்கல் பரிசு கொடுத்ததை பல அரசியல் கட்சிகளும் சமூக நல ஆர்வலர்களும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் இன்று தூத்துகுடியில் நடைபெற்ற திமுக கூட்டம் ஒன்றில் பேசிய திமுக எம்பி கனிமொழி இதுகுறித்து கூறியபோது, 'தமிழக அரசு செய்த நல்ல விஷயம் பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கியது தான் என்று கூறினார்.

மேலும் பிரதமர் மோடி வெளிநாடு செல்லும் பணத்தை கொடுத்தாலே, கிராமப்புற மாணவர்களின் கல்வி கடனின் வட்டியை தள்ளுபடி செய்திருக்கலாம் என்றும், அடுத்த தேர்தல் 2021ல் வரும் என்று நினைக்க வேண்டாம் அதற்கு முன் 20 தொகுதிகளில் தேர்தல் வரும் என்றும், அதில் அதிக தொகுதிகளை கைப்பற்றி திமுக ஆட்சி அமைக்கும் என்றும் கனிமொழி பேசினார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்