குடிக்கவே தண்ணி இல்ல; வாஷிங் மெஷினை வெச்ச என்ன பண்ண? – கமல்ஹாசன் விமர்சனம்!

Webdunia
திங்கள், 15 மார்ச் 2021 (11:21 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் வாக்குறுதிகளை அதிமுக வெளியிட்டுள்ள நிலையில் இதுகுறித்து கமல்ஹாசன் விமர்சனம் செய்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ.1500 உதவித்தொகை, இலவச வாஷிங் மெஷின் போன்ற அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் அதிமுகவின் இந்த அறிவிப்பு குறித்து மக்கள் நீதி மய்யம் பிரச்சாரத்தில் பேசிய கமல்ஹாசன் “பல இடங்களில் மக்கள் குடிநீர் கூட கிடைக்காமல் தவிக்கும் நிலை உள்ளது. இந்நிலையில் வாஷிங் மெஷினால் யாருக்கு என்ன பயன்? வருடத்திற்கு ஆறு சிலிண்டர் வழங்க 5 லட்சம் கோடி ரூபாய் செலவாகும். ஏற்கனவே அரசின் கடன் அதிகரித்துள்ள நிலையில் அதை மேலும் அதிகரிக்க செய்யும் வகையிலேயே அதிமுக திட்டங்கள் உள்ளன” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்