சமீபத்தில் ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது நடந்த பயங்கரவாத தாக்குதலை, தலிபான் அமைச்சர் கண்டித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து, அவரது கண்டனத்திற்கு அமைச்சர் ஜெய்சங்கர் நன்றி தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்த உரையாடலில் இந்தியா மற்றும் ஆப்கன் மக்களுக்கு இடையேயான பழமையான நட்பு, மற்றும் ஆப்கானிஸ்தான் முன்னேற்றத்தில் இந்தியாவின் பங்கு குறித்தும் விவாதிக்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.