திணிக்கப்படுபவை எதிர்க்கப்படும் – கமல் அதிரடி டிவிட்!

Webdunia
திங்கள், 26 டிசம்பர் 2022 (10:01 IST)
ஹிந்தியை வளர்க்க, அதை பிறர் மேல் திணிப்பது அறிவீனம் என  நடிகரும் அரசியல் தலைவருமான கமலஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு.


நடிகரும் அரசியல் தலைவருமான கமலஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் கேரளாவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் நாடாளுமன்றத்தில் தேசிய கல்வி நிறுவனங்களில் ஹிந்தியை பயிற்று மொழியாக்கும் திட்டத்திற்கு எதிராக பேசிய வீடியோவை பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவுடன் தனது சொந்த கருத்தையும் சேர்த்து பதிவிட்டுள்ளார். அவர் குறிப்பிட்டுள்ளதாவது, தாய்மொழி எமது பிறப்புரிமை. பிறமொழிகளைப் பயில்வதும் பயன்படுத்துவதும் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில்தான். நிகழும் 75 ஆண்டுகளாக இதுதான் தென்னிந்தியாவின் உரிமைக்குரல். வடகிழக்கும் இதையே பிரதிபலிக்கும்.

ஹிந்தியை வளர்க்க, அதை பிறர் மேல் திணிப்பது அறிவீனம். திணிக்கப்படுபவை எதிர்க்கப்படும். இதையே கேரளமும் பிரதிபலிக்கின்றது என்பது பாதி இந்தியாவிற்கான சோற்றுப் பதம். பொங்கல் வருகிறது எச்சரிக்கை. ஓ! Sorry உங்களுக்குப் புரிவதற்காக “ஜாக்த்தே ரஹோ”என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்