இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான தா பாண்டியன் அவர்கள் சற்று முன் காலமானதாக மருத்துவமனை வட்டாரங்கள் அறிவித்த நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
மேலும் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆங்காங்கே அவரது புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான தா பாண்டியன் அவர்கள் மீது தனி மரியாதை வைத்து இருந்தவர்களில் ஒருவர் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் என்பது அறிந்ததே.
இந்த நிலையில் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் தா பாண்டியன் அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த டுவீட்டில் அவர் கூறியிருப்பதாவது:
பொதுவுடைமைத் தூணொன்று சாய்ந்தது. பற்பல விழுதுகள் பாய்ச்சிவிட்டு கம்யூனிஸ வேரொன்று வீழ்ந்திருக்கிறது. தோழர் தா.பாண்டியன் மறைவு தமிழர்கள் அனைவருக்குமே பொது இழப்பு.