இதுவொரு மன்னிக்க முடியாத குற்றம்: கமல்ஹாசன் ஆவேசம்

Webdunia
வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (14:09 IST)
நீட் தேர்வுகளை நடத்தியே தீருவது என தேசிய தேர்வு முகமை பிடிவாதமாக இருப்பதும், நீட் தேர்வை நடத்த விடமாட்டோம் என பல மாநில முதல்வர்கள் சட்ட நடவடிக்கை எடுக்க முயற்சி செய்து வருவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே திட்டமிட்டபடி நீட் தேர்வு செப்டம்பர் 13 ஆம் தேதி நடக்குமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது 
 
இந்த நிலையில் நீட் தேர்வை நடத்த வேண்டாம் என்றும், மாணவர்களின் வாழ்க்கையில் விளையாட வேண்டாம் என்றும் திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல்வாதிகள் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர் 
 
அந்த வகையில் தற்போது தொடரில் மட்டுமே விறுவிறுப்பாக அரசியல் செய்து வரும் கமலஹாசன் இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: தன் முடிவுகளால் அரசு இன்றைய தலைமுறையை அலட்சியப் படுத்துவது  என்பதே கடும் விமர்சனத்துக்குரிய தவறு.  
 
நாளையை ஆளப்போகும் மாணவர்களின் மனநிலை புரியாமல், முடிவுகள் எடுப்பது மன்னிக்க முடியாத குற்றம்.  நுழைவுத் தேர்வை ஒத்தி வைப்பதே சரியான முடிவு. கமல்ஹாசனின் இந்த டுவிட்டுக்கு வரவேற்பு பெருகி வருகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்