ஏற்கனவே விஜயகாந்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர் என்பது தெரிந்ததே
இந்த நிலையில் தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள் விஜயகாந்துக்கு தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: தமிழக அரசியல் களம் மீண்டும் முழு வீச்சில் உங்களைக் காணக் காத்திருக்கிறது; மக்கள் பணியைத் தொடர வாழ்த்துக்கள் நண்பர் விஜயகாந்த் அவர்களே’ என்று குறிப்பிட்டுள்ளார்.