ஓபிஎஸ் பதவி விலக வேண்டுமா... கமல் கூறுவது என்ன?

Webdunia
வியாழன், 26 ஜூலை 2018 (18:47 IST)
நடிகர் மற்றும் மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன் இன்று விமானநிலையத்தில் செய்தியாலர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் துணை முதல்வர் பன்னீர் செல்லவத்தின் பதவி விலகல் கோரிக்கை குறித்து கேள்வி எழுப்பட்டது. 
 
இதற்கு கமல் பதில் அளித்தது பின்வருமாறு.. 
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பதவி விலக வேண்டும் என்று தமிழகம் வழிமொழிவதில் எனக்கு சந்தோஷம். இதை நான் சொல்லி ஒரு வருஷம் ஆகிவிட்டது. டிவிட்டரில் பல ட்வீட்டுகள் போட்டதும் இதற்குதான். இதுபோன்ற நிலவரம் கூடி வருவதுதான் நான் அரசியலுக்கு வர முக்கிய காரணம்  என்றார்.
 
நேற்றைய பேட்டியில், அரசியலுக்காக சினிமா சம்பாத்தியத்தை தியாகம் செய்யமாட்டேன். அரசியலில் இருக்க பணம் வேண்டும். இங்கு யாரும் தியாகங்கள் செய்யவரவில்லை என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்