பாலியல் தொல்லையால் கோவையில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது என கமல் வேதனை.
கோயம்புத்தூரில் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி பொன்தாரணி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மாணவியின் பெற்றோர் அப்பள்ளி ஆசிரியர் அளித்த தொல்லையால் தன் மகள் இறந்திருப்பதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
இதுதொடர்பாக போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து போலீஸார் தனியார் பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை கைது செய்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் குறிப்பிட்டுள்ளதாவது,
பாலியல் தொல்லையால் கோவையில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. அவரது மரணத்திற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படவேண்டும். வேலியே பயிரை மேயும் அவலத்திற்குத் தமிழகம் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.