கமல் போட்டியிடும் தொகுதி இன்று அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 12 மார்ச் 2021 (10:10 IST)
மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடும் தொகுதி இன்று அறிவிக்கப்பட உள்ளது.

நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக அதிமுக தவிர மூன்றாவது அணியாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் போட்டியிடப் போவது என்பது தெரிந்தது இந்த கூட்டணியில் சரத்குமார் கட்சி மற்றும் ஐஜேகே கட்சி ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என்பது குறிப்பிடத்தக்கது, இந்த நிலையில் ஏற்கனவே மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று அடுத்த கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது .

அதில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடும் தொகுதி அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது. கமல் சென்னையின் ஏதாவது தொகுதியில் போட்டியிடுவார் எனசொல்லப்படுகிறது. மயிலாப்பூர் அல்லது ஆலந்தூர் தொகுதியில் அவர் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்