முதல்வரின் பிரச்சாரத்துக்காக வந்த ஜெனரேட்டர் எந்திரத்தில் தீ!

Webdunia
வெள்ளி, 12 மார்ச் 2021 (09:45 IST)
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சேலம் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதியில் அதிமுக வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேச உள்ளார்.

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி இன்று முதல் பரப்புரை மேற்கொள்ல உள்ளார். அதையொட்டு சேலம் மாவட்ட வேட்பாளர்களுக்கான அறிமுக பிரச்சாரம் இன்று நடக்க உள்ளது. இந்நிலையில் தம்மம்பட்டி பேருந்து நிலையம் அருகே அவர் பேசுவதற்காக ஜெனரேட்டர் பொருந்திய வாகனம் வரவழைக்கப்பட்டு இருந்தது.

நேற்று இரவு அந்த வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பான சூழல் உருவானது. தீயை அணைக்க முயன்றும் வாகனம் முழுவதும் எரிந்து நாசமாகியது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்