திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!

வெள்ளி, 12 மார்ச் 2021 (07:47 IST)
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!
திமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்ட நிலையில் இறுதி கட்டமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகள் குறித்த பேச்சுவார்த்தை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது 
 
இந்த பேச்சுவார்த்தையில் இரு கட்சி தலைவர்கள் இடையே ஏற்பட்ட உடன்பாட்டை அடுத்து தற்போது அது குறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. திமுக கூட்டணியில் இடம் பெற்று இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பரங்குன்றம், கந்தர்வகோட்டை, திண்டுக்கல், கோவில்பட்டி, அரூர், கீழ்வேளூர் ஆகிய ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கந்தர்வகோட்டை என்ற தொகுதி மட்டும் தனி தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது
 
இதற்கான ஒப்பந்தத்தை திமுக தலைவர் முக ஸ்டாலின் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் இடையே கையெழுத்தானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாகும் என்று தெரிகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்