மின்கட்டணம் செலுத்த மீண்டும் அவகாசம்: சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

Webdunia
திங்கள், 18 மே 2020 (16:54 IST)
கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு பொதுமக்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வரும் நிலையில் தற்போது மின் கட்டணம் செலுத்த ஜூன் 6ஆம் தேதி வரை காலக்கெடுவை நீட்டித்துள்ளது
 
வீடுகள், சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் ஜூன் 6ம் தேதி வரை நீ்ட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை ஐகோர்ட்டில் இன்று தெரிவித்துள்ளது.
 
கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை ஜூலைக்கு தள்ளிவைக்க கோரி பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் ஜூன் 6ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 
 
தமிழக அரசின் வழக்கறிஞரின் இந்த உத்தரவாதத்தை பதிவுசெய்த நீதிபதிகள் இந்த வழக்கின் விசாரணையை ஜூன் 8ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். மின்கட்டணம் செலுத்த ஜூன் 6 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்