திமுக அமைச்சர்கள் மீதான வழக்குகள்: இன்று முதல் விசாரிக்கிறார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

Webdunia
செவ்வாய், 2 ஜனவரி 2024 (07:21 IST)
திமுக அமைச்சர்கள் மீதான வழக்குகளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிப்பார் என ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் இன்று முதல் அவர் விசாரணையை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 தற்போது அமைச்சர்களாக இருக்கும் தங்கம் தென்னரசு, ஐ பெரியசாமி மற்றும் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆகியோர்கள் மீதான வழக்குகளை இன்று முதல் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிக்க உள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று முதல் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளும் விசாரணை வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தற்போதைய அமைச்சர்களை வழக்குகளை விரைந்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்து அவர் ஒரு சில மாதங்களில் தீர்ப்பளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் உள்ள நிலையில், அமைச்சர் பொன் முடிக்கும் எதிரான தீர்ப்பு வந்த நிலையில் மேலும் 3 அமைச்சர்கள் மீதான வழக்குகளில் என்ன தீர்ப்பு வரும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்