தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி பெயரில் கூட்டு மோசடி : கரூரில் பரபரப்பு

Webdunia
திங்கள், 7 ஜனவரி 2019 (18:23 IST)
கரூர் அருகே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி நாட்ராயன் பெயரில் கூட்டு மோசடி! அப்பகுதியில் அடியாட்களை கொண்டு வீடுகளை காலி செய்யச் சொன்னதாகவும், 50 ஆண்டுகளுக்கு மேலாக பண்ணயம் பார்த்த கூலி தராமல் வெளியேற்ற சொன்னதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கரூர் பைபாஸ் திருக்காம்புலியூர் பகுதியில் சுமார் 5 ½ ஏக்கர் நிலத்தினை கடந்த 50 வருடங்களாக 6 குடும்பங்களை சார்ந்தவர்கள் பராமரித்து அங்கேயே வசித்து வந்துள்ளனர்.
மேலும், அதே பகுதியில் அந்த பண்ணயம் பார்த்ததற்கும், எந்த வித செட்டில்மெண்ட் செய்யாமல், 6 குடும்பங்களில் ஒருவருக்கு மட்டும் செட்டில்மெண்ட் செய்து அந்த நிலத்தினை கரூர் முன்னாள் எம்.பி யும், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகியுமான நாட்ராயன் என்பவரும், அவரது மகன் பிரபுவும் வாங்கியுள்ளனர்.

இந்நிலையில், அந்த 5 குடும்பத்திற்கு செட்டில்மெண்ட் தராமல், அடியாட்களை கொண்டு, 5 குடும்பத்தினையும், நிலத்தினை விட்டு வெளியேறுமாறு கொலைமிரட்டல் விடுத்ததாகவும் கூறி அப்பகுதி மக்களை மிரட்டி விட்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிதியையும், உடனே நியாயம் கிடைக்க வேண்டுமென்றும் அந்த குடும்பங்களை சார்ந்த சுமார் 50 க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் போர்க்கொடி ஏந்தியுள்ளனர்.

தற்போது  தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகியும், முன்னாள் எம்.பி யுமான நாட்ராயனின் செயலுக்கு தற்போது இருக்கின்ற அ.தி.மு.க அரசும், கரூர் மாவட்ட நிர்வாகமும் உடந்தையாக இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்