ரஜினி , கமல் ,விஜய் ஆகியோரை தாக்கிப் பேசினாரா சத்தியராஜ்...?
திங்கள், 7 ஜனவரி 2019 (17:32 IST)
தமிழ் சினிமாவில் அதிரடி பேச்சுக்கு சொந்தக்காரர் நடிகர் சத்தியராஜ். தமிழகத்தில் சினிமா நடிகர்கள் முதல்வராக வரக்கூடாது என மலையாள தொலைக்காட்சிக்கு அவர் பேட்டி அளித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
நான் திரையுலகுக்கு வந்து 41 வருடம் ஆகிறது. ஆனால் ஒருபோதும் அரசியல் என்னை ஈர்த்ததில்லை. தியாகமும், மற்றும் அர்பணிப்பு உள்ளவர்கள் தான் முதல்வர் பதவிக்கு வர வேண்டும்.சினிமா நடிகர்கள் அதற்கு தகுதி இல்லாதவர்கள். முதல்வராக வர வேண்டுமென்றால் தொடக்கம் முதல் மக்களின் உணர்வுகளை பற்றி தெரிந்து அவர்களின் பிரச்சனைகளை அறிந்து கொண்டிருக்க வேண்டும்.
சினிமா அடையாளத்தை பயன்படுத்தி யாரும் முதல்வராக முடியாது. அப்படி யாராவது முதல்வராக நினைத்தால் அது மக்களின் சேவைக்காக இருக்காது. மாறாக பதவிக்காகத்தான் இருக்கும். இவ்வாறு பேசினார்.
மேலும் தமிழகத்தின் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு. மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோரை புகழ்ந்து பேசியதுடன் , கம்யூனிஸ்ட் காரர்கள்தான் தமிழகத்தை ஆள வேண்டும் என்று கூறினார்.
தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஒரு பிரபல நடிகர். இனி அரசியல் கட்சி தொடங்கப்போவதாகக் கூறிக்கொண்டுள்ள ரஜினியும் நடிகர் . அரசியல் வசனம் பேசி எதிர்ப்பு வரும் போது வீடியோ பேட்டி வெளிவிட்டு,படத்தை ரிலீஸ் செய்துடன் ... முதல்வர் ஆகும் கனவில் உள்ள நடிகர் விஜய் ஆகியோரும் அரசியல் களத்திற்கு தயாராகி விட்டனர். விஜயகாந்த் அரசியலிலுக்கு வந்து 10 வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது.
அப்படி இருக்க தன் சக நடிகர்கள் முதல்வராவது சத்தியராஜிற்கு விரும்பம் இல்லையா என்பது போன்ற பல கேள்விகள் அரசியல் விமர்சகர்கள் முன் வைக்கிறார்கள்.
இந்நிலையில் , சத்தியராஜின் இப்பேச்சு சினிமா வட்டாரத்தில் மட்டுமல்ல, அரசியல் தலைவர்களிடையே கடும் விமர்சனத்தைக் கிளப்பி உள்ளது.