உதயநிதிக்கு அடிக்கும் லக்: ஜெயகுமார் வியூகம் சரியா??

Webdunia
சனி, 8 பிப்ரவரி 2020 (11:18 IST)
பிராந்த் கிஷோர் என்ன செய்தாலும் 2021 ஆம் ஆண்டு தேர்தலிலும் அதிமுகவே ஆட்சியை பிடிக்கும் என ஜெயகுமார் கூறியுள்ளார். 
 
வரும் தேர்தலில் ஐபேக் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற உள்ளோம் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது டிவிட்டரில் தெரிவித்தார். பிரசாந்த் கிஷோரின்  நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவதை முக ஸ்டாலின் தனது டுவிட்டரில் ஒப்புக்கொண்டுள்ளதை அடுத்து திமுக மீது விமர்சனங்கள் எழுந்தது.   
 
விமர்சனங்கள் ஒரு பக்கம் இருக்க, மறுபக்கமோ ஐ - பேக் நிறுவனம் தமிழகத்தில் தேர்தல் பணிகளுக்கான நபர்களை தேர்வு செய்யும் பணியை துவங்கியுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பத்தை தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 
 
இந்நிலையில் அதிமுக அமைச்சர் ஜெயகுமார், பிராந்த் கிஷோர் என்ன செய்தாலும், எந்த மாதிரியான வியூக அமைத்து கொடுத்தாலும் சரி 2021 ஆம் ஆண்டு தேர்தலிலும் அதிமுகவே ஆட்சியை பிடிக்கும். 
 
ஆனால் இதில் ஒரு விஷயம் என்னவெனில் பிரசாந்த் கிஷோர் கொடுக்கும் ஆலோசனைகளின் அடிப்படையில் உதயநிதி ஸ்டாலினை ஒரு தலைவராக புரொஜெக்ட் செய்யும் முயற்சிகள் நிச்சயம் நடக்கும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்