நடிகர் விஜய் வீட்டில் ஐடி ரெய்ட் ஓவர் ...

வியாழன், 6 பிப்ரவரி 2020 (20:50 IST)
நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் ரெய்ட் நிறைவடைந்தது
நடிகர் விஜய் வீட்டில் நேற்றும் இன்றும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய நிலையில்  தற்போது சோதனை நிறைவடைந்துள்ளது.
 
திரைப்பட உலகத்தின் இளைய தளபதி என்று அன்புப்‌ பெருக்கோடு அழைக்கப்படிகிற விஜய்‌ அவர்களின்‌ வீடுகளிலும்‌, தயாரிப்பாளர்‌ அன்புசெழியன்‌ சம்மந்தப்படட மொத்தம்‌ 38 இடங்களில்‌ வருமான வரித்துறையினர்‌ சோதனையிட்டிருக்கிறார்கள்‌. நெய்வேலியில்‌ மாஸ்டர்‌ திரைப்பட படப்பிடிப்பில்‌ பங்கு கொண்டிருந்த விஜய் வலுக்கட்டாயமாக வருமான வரித்துறையினரால்‌ சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.
 
நேற்று,ஒரே இரவில் விஜய்யின் சாலிகிராமம் வீடு, நீலாங்கரை வீடு மற்றும் பனையூர் வீடு ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்றதாக தெரிகிறது. 23  மணி நேரமாக பனையூர் வீட்டில் நீடித்த இந்த விசாரணையில் விஜய்யின் வங்கி கணக்குகள், அவரின் சம்பளம் குறித்த விவரங்கள் குறித்தும் விசாரிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 
 
பிகில் படத்தில் நடித்ததற்காக நடிகர் விஜய் ரூ.30 கோடி சம்பளம் பெற்றதாக வருமான வரித்துறை தகவல் வெளியிட்டுள்ளனர். ஆனால், உண்மையில் அவரது சம்பளம் ரூ.50 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும், விஜய்யிடம் இது குறித்த வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதோடு வருமான வரித்துறை அதிகாரிகள் அவரது மனைவி சங்கீதாவிடமும் வாக்குமூலம் பெற்றுள்ளதாக தெரிகிறது. 
 
இந்நிலையில், பிகில் படத் தயாரிப்புக்கு நிதி அளித்த சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் இருந்து ரூ.77 கோடியை பறிமுதல் செய்தது வருமான வரித்துறை. மேலும், அவருக்கு சொந்தமான சென்னை மற்றும் மதுரையில் உள்ள 38 இடங்களில் நடந்த வருமான வரித்துறை சோதனையில் ரூ.300 கோடி மறைக்கப்பட்டது கண்டுபிக்கப்பட்டுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 
 
இந்நிலையில் விஜய் வீட்டில் எந்த ஆவணங்களுன், பணமும் சிக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், விஜயின் சொத்து விவரங்கள், முதலீடுகள் குறித்தும், பிகில் படத்தில் விஜய்யின் சம்பளம் குறித்து  அதிகாரிகள் ஆய்வு செய்ததாகவும் தகவல் வெளியாகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்