காளீஸ்வரி நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை..

Webdunia
புதன், 17 மே 2017 (12:12 IST)
தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் உள்ள பிரபல காளீஸ்வரி எண்ணெய் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.


 

 
சமீபகாலமாக, வருமான வரித்துறையினர் தமிழகத்தின் பல இடங்களில் சோதனைகள் நடத்தி வருகின்றனர். சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார் உள்ளிட்ட சிலரின் வீடுகளில் சோதனை நடத்தினர். அதன் பின், நேற்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும், டெல்லி, நொய்டா உள்ளிட்ட 14 இடங்களில் அவர்கள் நேற்று சோதனை நடத்தினர். 
 
இந்நிலையில், பிரபல காளீஸ்வரி எண்ணை நிறுவனத்திற்கு சொந்தமான 54 இடங்களில், 250ற்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை ஒரே நேரத்தில் சோதனையை தொடங்கினர்.
 
இந்த நிறுவனம், பல வருடங்களாக முறையான வருமானவரியை தாக்கல் செய்யவில்லை எனவும், அதன் புகாரிலேயே இந்த சோதனைகள் நடைபெற்று வருவதாக தெரிகிறது.
அடுத்த கட்டுரையில்