வேற எவன் வந்தாலும் சரி! ரஜினியை தாக்குகிறாரா கமல்?

Webdunia
வெள்ளி, 9 மார்ச் 2018 (12:51 IST)
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் நேற்று சென்னையில் மகளிர் தின மாநாடு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய கமல், ஆட்சிக்கு யார் வந்தாலும், அவ்ர்களை  தட்டி கேட்க பொதுமக்கள் தயங்க கூடாது என்று பேசினார்.

பின்னர் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த கமல், ஆட்சிக்கு வருபவர்களிடம் சரியான ஆட்சி தராவிட்டால் பதவி விலக வேண்டும் என்ற உத்தரவாதத்தை வாங்கி கொள்ளுங்கள். ஆட்சி செய்பவர் சரியாக ஆட்சி செய்கிறாரா? என்று சந்தேகப்பட்டு கொண்டே இருங்கள். இந்த ஆளு நேர்மையானவன் தானா? என்று நீங்கள் பார்த்து கொண்டே இருந்தால், ஆட்சி செய்பவர்களுக்கு நேர்மையாக இருப்பதை தவிர வேறு வழியில்லை. ஆட்சிக்கு நான் மட்டுமல்ல, வேற எவன் வந்தாலும் சரி, அவன் மீது சந்தேகப்படுங்கள்' என்று கமல் கூறினார்.

கமல் 'எவன் வந்தாலும் சரி' என்று யாரையும் குறிப்பிடாமல் பொதுவாகத்தான் கூறினார் என்றாலும் சமூக வலைத்தளங்களில் இதுகுறித்த விவாதங்கள் சூடாக நடைபெற்று வருகிறது. அவர் ரஜினியைத்தான் கூறியதாக ஒரு குரூப் காரசாரமாக கூறி வருவதால் சமூக வலைத்தளம் பரபரப்பில் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்