இன்று நடைபெறும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் இன்வேலிட் மதிப்பெண் அறிமுகம்.. அப்படி என்றால் என்ன?

Siva
ஞாயிறு, 9 ஜூன் 2024 (11:56 IST)
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகள் இன்று நடைபெறும் நிலையில் இன்றைய தேர்வில் இன்வேலிட் மதிப்பெண் என்பது அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன
 
இன்று நடைபெறும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் பொது அறிவு, நுண்ணறிவு திறன் ஆகிய இரண்டு பகுதிகளிலிருந்து தலா 100 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண் என்ற நிலையில் மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வர்கள் பதில் எழுதுவார்கள்.
 
இந்த நிலையில் இன்றைய தேர்தல் இன்வேலிட்  மதிப்பெண் என்ற முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது ஒரு கேள்விக்கு முதலில் தவறான பதிலை எழுதி விட்டு அதன் பிறகு அதை அடித்து விட்டு சரியான பதிலை எழுதினால் அந்த கேள்விக்கான மதிப்பெண் இன்வேலிட் ஆகிவிடும். அதாவது மதிப்பெண் கிடையாது.
 
முறைகேடுகளை தவிர்க்கவே இந்த புதிய இன்வேலிட் மதிப்பெண் முறை கொண்டுவரப்பட்டுள்ளதாக தேர்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே முதன் முதலில் ஒரு பதிலை தேர்வு செய்யும் போதே நன்றாக யோசித்து சரியான பதிலை தேர்வு செய்ய வேண்டும். முதலில் தவறான பதிலை தேர்வு செய்து விட்டு அதன் பிறகு சரியான பதிலை அதை அடித்து விட்டு தேர்வு செய்தால் கூட மதிப்பெண் கிடைக்காது என்பதை தேர்வர்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்