தமிழகத்தில் ஏப்ரல் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்த நிலையில் நாளை பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்றும், முதல் நாளே மாணவ மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளி வளாகத்தில் பராமரிப்பு, பள்ளி வாகனங்கள் சோதனை உள்பட அனைத்து முன்னேற்பாடுகளும் முடிக்கப்பட்டு பள்ளிகள் திறக்க தயார் நிலையில் இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.