தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்க துவங்கியது தொற்று!

Webdunia
புதன், 20 ஏப்ரல் 2022 (11:55 IST)
தமிழகத்தில் மீண்டும் முககவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.
 
கடந்த 2 நாட்களாக தொற்று எண்ணிக்கை வேகமாக பரவி வருவதால் இனி கடைகளில், பொது இடங்களில் சமூக இடைவெளி, சானிடைசர், முக கவசம் மீண்டும் கட்டாயம் கட்டாயமாக்கப்படும் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 
 
மேலும், தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பதால் சோதனைகளை அதிகப்படுத்தி பொதுமக்கள் முக கவசம் அணிவதை கண்காணித்து நோய்த்தொற்று பரவாமல்  நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்