மணமக்களுக்கு கிடைத்த அசாதாரண திருமணப் பரிசு - வைரல் க்ளிக்!!

Webdunia
புதன், 20 ஏப்ரல் 2022 (11:20 IST)
குஜராத்தின் ராஜ்கோட்டில் உள்ள மணமகன் ஒருவருக்கு வழக்கத்திற்கு மாறான ஒரு அசாதாரண திருமணப் பரிசு கிடைத்துள்ளது. 

 
கோடை வெயில் நேரத்தில் எலுமிச்சம் பழச்சாறு குடிக்கும் பழக்கத்தை கொண்டுள்ள மக்கள், எலுமிச்சை விலை திடீர் உயர்வால் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஒரு கிலோ ரூ.200 ஆக விற்பனையாகி வரும் நிலையில் வடமநிலங்களில் ரூ.300-க்கும் மேல் விற்கப்பட்டு வருகிறது. 
 
இந்நிலையில் குஜராத்தின் ராஜ்கோட்டில் உள்ள மணமகன் ஒருவருக்கு வழக்கத்திற்கு மாறான ஒரு அசாதாரண திருமணப் பரிசு கிடைத்துள்ளது. மணமகனுக்கு அவரது நண்பர்கள் ஒரு பெட்டி நிறைய எலுமிச்சம் பழங்களை பரிசாக அளித்துள்ளனர். தனது திருமணத்திற்காக மணமகனிடம் எலுமிச்சம் பழங்களை நண்பர்கள் பரிசளிக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
 
குஜராத்தில் எலுமிச்சம்பழம் ஒரு கிலோவுக்கு 200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தலைநகர் டெல்லியில் எலுமிச்சையின் விலை கிலோவுக்கு 300 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. விலைவாசி உயர்வுக்கு முன், எலுமிச்சை பழம் கிலோ, 50 முதல், 69 ரூபாய்க்கு விற்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்