2047-ல் இந்தியா வல்லரசு நாடாக மாறும்.! மத்திய அமைச்சர் எல்.முருகன் உறுதி..

Senthil Velan
புதன், 28 பிப்ரவரி 2024 (11:35 IST)
2047 ஆம் ஆண்டில் இந்தியா வல்லரசு நாடாக மாறும் என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ரூ.17,300 கோடி மதிப்பில் உள்கட்டமைப்பு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். 

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு வரும் போதெல்லாம், பல ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை கொண்டு வருவதாக பெருமிதம் தெரிவித்தார். 
 
கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் தமிழ்நாட்டிற்கு ரூ.11 லட்சம் கோடி திட்டங்களை கொண்டு வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

தமிழ்நாடு மிகப்பெரிய வளர்ச்சியடைந்த மாநிலமாக மாறி உள்ளதாகவும், 2047 ஆம் ஆண்டில் உலகளவில் இந்தியா வல்லரசு நாடாக மாறும் எனவும் மத்திய அமைச்சர் எல். முருகன் நம்பிக்கை தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்