பாஜக கூட்டணியில் உறுதியான பாமக.. அன்புமணிக்கு அமைச்சர் பதவி..!

Siva

வியாழன், 22 பிப்ரவரி 2024 (08:13 IST)
பாஜக கூட்டணியில் பாமக இணைவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் அன்புமணிக்கு அமைச்சர் பதவி தர பாஜக ஒப்பு கொண்டுள்ளதால் இரு கட்சிகளும் கூட்டணிக்கு ஒப்புக்கொண்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இணையும் என்று கூறப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் அன்புமணியிடம் நேரடி பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அப்போது இந்த முறை பாமகவுக்கு கண்டிப்பாக ஒரு மத்திய அமைச்சர் பதவி தருகிறோம் எங்களுடன் கூட்டணிக்கு வாருங்கள் என்று சொன்னதை அன்புமணி ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் டாக்டர் ராமதாஸ் அவர்களுக்கு இதில் சிறிதும் விருப்பமில்லை என்றும் அதிமுக கூட்டணியில் சேர்ந்தால் அடுத்து 2026 சட்டமன்ற தேர்தலில் கூடுதல் சீட்டு பெறலாம் என்றும் கூறியதாகவும் ஆனால் அதை அன்புமணி ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.

3 பாராளுமன்ற தொகுதிகள், ஒரு ராஜ்யசபா தொகுதி மற்றும் ஒரு அமைச்சர் பதவி என பாமக கூறியதை அன்புமணி ஏற்றுக்கொண்டதாகவும் விரைவில் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்