முன்கூட்டியே தெரிந்த வருமானவரித்துறை சோதனை தகவல்: அதிர்ச்சியில் அதிகாரிகள்..!

Webdunia
வெள்ளி, 3 நவம்பர் 2023 (14:27 IST)
வருமானவரித்துறை சோதனை நடைபெறும் தகவல் நேற்றே வெளியானதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும், வருமான வரி சோதனை குறித்த தகவல் வெளியானது எப்படி? என அதிகாரிகள் விசாரணை செய்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
3 வெவ்வேறு வழக்குகளில் அதிக இடங்களில் சோதனை மேற்கொள்ள ஐ.டி. அதிகாரிகள் சென்னையில் வந்து நேற்றே தங்கி இருந்தனர். இந்த நிலையில் நேற்றே அதிகாரிகள் தங்கியதை அடுத்து தமிழக அமைச்சர் ஒருவர் வீட்டில் சோதனை நடைபெறும்  என முன்னரே சோதனை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இதனால் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
 இந்த நிலையில் இன்று காலை முதல் பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களிலும், சென்னை கோவை உள்பட ஒரு சில இடங்களில் உள்ள கட்டுமான நிறுவனங்களின் அலுவலகங்களிலும் சோதனை நடந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. 
 
தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் 80க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்