தமிழக அமைச்சர் ஏ.வ.வேலு அவர்கள் வீடு மற்றும் அலுவலகம் ஆகியவற்றில் இன்று வருமானவரித்துறையினர் அதிகாலை முதல் சோதனை செய்து வருவதாக வெளியான தகவலை பார்த்தோம். இந்த நிலையில் அமைச்சரின் வீடு மட்டும் இன்றி இன்னும் ஒரு சில இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருவதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கோவை ராமநாதபுரம் பார்சன் குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும், அமைச்சர் எ.வ. வேலுவின் உறவினர் மீனா ஜெயக்குமார் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாகவும், மீனா ஜெயக்குமாரின் மகன் ஸ்ரீராம் இல்லத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது என்றும் கூறப்படுகிறது.