சென்னையில் உள்ள கோயம்பேடு சந்தையில், பெண்ணின் சடலம் கோணிப்பையில் இருந்து போலீசாரால் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சூளைமேட்டை சேர்ந்த மேல்விழி என்பவர் நேற்று முதல் காணவில்லை. அதனால் அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் அஜித்குமார் என்பவரை கைது செய்து விசாரித்து வந்தனர்.
அந்த விசாரணையில் போலீசுக்கு திடுக்கிடம் தகவல் கிடைத்தது. அதில் அஜித்குமார் அந்த பெண்ணை கொன்று கோணிப்பையில் கட்டி கோயம்பேடு சந்தையில் வைத்து விட்டு வந்ததாக தெரிவித்தான். இதனையடுத்து, போலீசார் உடனடியாக கோயம்பேட்டில் உள்ள மேல்விழியின் சடலத்தை மீட்டனர்.
தற்போது போலீசார் மேல்விழி கொலைக்கான காரணத்தை அஜித்குமாரிடம் விசாரித்து வருகின்றனர்.