தமிழ்நாட்டை சோமாலியா போல் மாற்ற மத்திய அரசு திட்டம் - டிடிவி தினகரன் பேட்டி

புதன், 18 ஏப்ரல் 2018 (15:31 IST)
தமிழகத்தில் கவர்னர் தன்னிச்சையாக செயல்படுகின்றார் என கரூரில் டி.டி.விதினகரன் பேட்டியளித்துள்ளார்.

 
கரூரில், காவிரிமேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், காவிரி மேலாண்மை விவகாரத்தில் அக்கறைகாட்டாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் சார்பில், கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. கரூர்தாலுக்கா அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் அமைப்பு செயலாளருமான செந்தில்பாலாஜி தலைமை வகித்தார்.
 
மேலும் இந்த ஆர்பாட்டத்தில்  அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் துணைபொதுச்செயலாளரும், ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ.வுமான டி.டி.விதினகரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 
 
அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி தினகரன் பேசிய போது கூறியதாவது:
 
தமிழகத்தில் ஆளுநர் என்பவர் ஒரு முதல்வர் போலவும், அனைத்து விஷயங்களிலும் தன்னிச்சையாக செயல்படுகின்றார். காவிரி மேலாண்மை வாரியம் விஷயம் மட்டுமல்ல, நியூட்ரினோ திட்டம், ஹைட்ரோகார்பன் ஆகிய ஏராளமான திட்டங்களை மத்திய அரசு தீட்டுகின்றது. இது விவசாயத்திற்கு எதிரான திட்டங்களாகும்,  மேலும், அதே போல தான் தூத்துக்குடி ஸ்டெர்லைட் திட்டமும். ஆகவே, ஒரு சோமாலியா போல, தமிழகத்தினை மாற்ற மத்திய அரசு திட்டம் தீட்டுகின்றது. ஆகவே, அதற்கு ஏற்றாற்போல் தான் கவர்னர் கடந்த 7 மாதங்களாக தன்னிச்சையாக செயல்படுகின்றார்” என அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்