அரசியல் கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளையும் மறந்து விடுவார்கள் : அய்யாக்கண்ணு

Webdunia
திங்கள், 14 ஜனவரி 2019 (19:13 IST)
நாட்டின் முதுகொலும்பு என்று சொல்லி வாக்குகள் வாங்கும் அரசியல் கட்சிகள் ! ஆட்சிக்கு வந்து விட்டால் விவசாயிகளையும் மறந்து விடுவார்கள் ஆகையால் இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களிலும் விவசாயிகளுக்கு எதிராக செயல்படும் அரசியல் கட்சிகளுக்கு எதிராக களமிறங்க உள்ளதாகவும் கரூரில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு பேட்டி.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு, கரூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது., 50 ஆண்டுகளுக்கு முன்பு கொங்கு மண்டலம் தான் வளம் கொழிக்கும் மண்டலமாக இருந்தது. தற்போது வறட்சி மண்டலமாக இருக்கின்றது அதற்கு மூலக்காரணம் பெய்கின்ற வெள்ளம், மழை நீர் எல்லாம் வீணாக கடலில் கலக்குகின்றது.

ஆகையால், கரூர் அருகே உள்ள தாதம்பாளையம் ஏரி போல, புணரமைக்க வேண்டும், இந்த ஏரியை தூர் வாரினால் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறும், நிலத்தடி நீர் மட்டமும் உயரும், ஆகையால் தற்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், கொங்கு மண்டலத்தினை சார்ந்தவர் தான் ஆகையால் உடனே நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விட்ட அவர், இல்லையென்றால் அந்த ஏரியை சுற்றியுள்ள சுமர் 40 க்கும் மேற்பட்ட கிராமங்களை சார்ந்த மக்கள் எந்த கட்சி கொடியினையும், ஊருக்குள் அனுமதிக்க மாட்டார்கள்.

தேர்தலை புறக்கணிப்பார்கள் என்றதோடு, திருவாரூர் இடைத்தேர்தல் நின்றதற்கு மத்தியில் உள்ள பா.ஜ.க ஆட்சியின் பிரஷர் தான் என்றார். மேலும், எந்த துறை அமைச்சராக இருந்தாலும், எந்த முதல்வராக இருந்தாலும் தவறு செய்திருந்தால் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டுமென்றார். தமிழகத்தில் 20 தொகுதியின் இடைத்தேர்தல் நடத்தியே ஆக வேண்டும், ஆகவே தேர்தல் வரும் என்ற நம்பிக்கை இல்லை அவர், தனது மகன் தவறு செய்தார் என்பதற்காகவே தேர் சக்கரத்தின் கீழ் வைத்து தண்டனை கொடுத்த தமிழர் பார்ம்பரியத்தினை சுட்டிக்காட்டினார்.

இதற்கு தேர்தல் தான் சிறப்பான முடிவு ஆகும், வரும் ஜனவரி 29 ம் தேதி டெல்லியில் உண்ணாவிரதம் நடத்த உள்ளோம், அதில் இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களை சார்ந்த விவசாயிகள் பங்கேற்கின்றோம், மேலும் அதனை தொடர்ந்து இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களிலும் பிரச்சாரம் செய்ய உள்ளோம், அந்த பிரச்சாரத்தில் விவசாயிகளுக்கு எதிராக எந்த அரசியல் கட்சி களம் இறங்குகின்றதோ. அந்த அரசியல் கட்சியினை தோற்கடிக்க முழு வீச்சில் பயணிப்போம் என்ற அய்யாக்கண்ணு, இந்தியாவின் முதுகெலும்பே விவசாயமும், விவசாயிகள் தான் என்று இருக்க, தேர்தல் முடிந்தவுடன் அரசியல் கட்சியினர் விவசாயிகளை மதிக்க வில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.

ஆகவே, இந்த முறை தமிழக அளவில் மட்டுமில்லாமல், இந்திய அளவில் விவசாயிகளின் நிலையை உணர்ந்தே அரசியல் கட்சியினர் தேர்தல் அறிக்கையினை வெளியிடவேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்