பசுவின் சிறுநீரில் மருத்துவ குணம் இருந்தால் மெடிக்கல் கம்பெனி சும்மா இருக்குமா? மருத்துவர் அமலோற்பவநாதன்

Siva
புதன், 22 ஜனவரி 2025 (14:47 IST)
பசுவின் சிறுநீரில் உண்மையில் மருத்துவ குணம் இருந்தால் மெடிக்கல் கம்பெனி எல்லாம் சும்மா இருக்குமா? என மருத்துவர் அமலோற்பவநாதன் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் இதுகுறித்து அளித்த பேட்டியில் கூறியதாவது:

பசுவினுடைய சிறுநீரகத்தில் உண்மையிலேயே மருத்துவ குணம் இருந்தால் உலகத்துல இருக்குற லீடிங் மெடிக்கல் கம்பெனி எல்லாம் சும்மா இருந்திருப்பார்களா? இந்நேரம் அதுல மருந்து பண்ணி பில்லியன் டாலர் சம்பாதிப்பாங்க, மக்களுக்கும் புதுப்புது ஆன்டிபயாடிக் கிடைத்தது இருக்கும்.

ஐஐடி இயக்குனர் இன்ஜினியரிங் பத்தி பேசலாம், பொருத்தமா பொருத்தமா இருக்கும், ஆனால் மருத்துவம் பற்றி அவர் பேசக்கூடாது. இன்றைய வரைக்கும் பசுவின் சிறுநீரில் மட்டுமல்ல, எந்த ஒரு விலங்கின் சிறுநீரிலும் மருந்து தயாரிக்க கூடிய அளவு மருத்துவத் தன்மை எதுவும் இல்லை.

சிறுநீர் என்பது பசு தன்னுடைய உடலில் இருந்து வேணாம்னு சொல்லி வெளியேற்றும் நீர். இந்த நீர்ல  மருந்து இருக்குன்னு சொல்லி அப்படியே எடுத்து குடிக்கிறது  மிகவும் ஆபத்தானது’ என்று  மருத்துவர் அமலோற்பவநாதன்
கூறியுள்ளார்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்