மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய வாலிபர் - காரணம் என்ன தெரியுமா?

Webdunia
வெள்ளி, 15 ஜூன் 2018 (12:16 IST)
அழகாக இல்லை எனக்கூறி தனது மனைவியை வாலிபர் ஒருவர் தனது நண்பர்களுக்கு விருந்தாக்கிய விவகாரம் திருத்துறைப்பூண்டியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள தலைக்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன்(36). இவர் ஒரு கூலித்தொழிலாளி. இவருக்கு 20 நாட்களுக்கு முன்பு லட்சுமி(24) என்கிற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. 
 
ஆனால், தினமும் இரவு மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த ராஜேந்திரன், லட்சுமியிடம் ‘நீ அழகாக இல்லை.. கருப்பாக இருக்கிறாய்’ எனக்கூறி அடித்து சித்ரவதை செய்துள்ளார். 
 
இந்நிலையில், திருமணத்தையொட்டி மாமனார் வீட்டில் நேற்று முன்தினம் கறிவிருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்து கொண்ட ராஜேந்திரன், இரவு தனது இருசக்கரவாகனத்தில் லட்சுமி அழைத்துக்கொண்டு தனது வீட்டிற்கு வந்துள்ளார். அதன் பின் குடிபோதையில் லட்சுமியின்  இடுப்பு, வயிறு, முதுகு உள்ளிட்ட பகுதிகளில் கடித்து காயப்படுத்தியுள்ளார். அதன் பின்பும் ஆத்திரம் தீராத அவர் அந்த இரவு நேரத்தில் லட்சுமியை அழைத்துக்கொண்டு அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார்.
 
அங்கு சென்றதும் செல்போன் முலம் தனது நண்பர்கள் இருவரை வரவழைத்து, லட்சுமியை அவர்களுக்கு விருந்தாக்கியுள்ளார். இதற்கு லட்சுமி கடும் எதிர்ப்பு தெரிவிக்க அவரை கம்பி மற்றும் கட்டையால் தாக்கியுள்ளார். இதில் லட்சுமி மயக்கமடைய ராஜேந்திரனின் நண்பர்கள் இருவரும் லட்சுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதன்பின் லட்சுமியை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்து விட்டார்.
 
இந்த விபரத்தை செல்போன் மூலம் தனது வீட்டாரிடம் லட்சுமி அழுது கொண்டே தெரிவிக்க அவர்கள் உடனடியாக வந்து அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்ததோடு, போலீசாரிடமும் புகார் அளித்தனர். 
 
ராஜேந்திரனிடமும், அவரது நண்பர் இருவரிடமும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த விவகாரம் திருத்துறைப்பூண்டியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்