கமல்ஹாசன் உடல்நிலை குறித்து ராமச்சந்திர மருத்துவமனையின் அறிக்கை

Webdunia
திங்கள், 22 நவம்பர் 2021 (18:48 IST)
நடிகர் கமலஹாசன் அவர்களுக்கு கொரனோ பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் கமல்ஹாசன் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சுவாச குறைவு, காய்ச்சல் மற்றும் தொற்று நோய் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது 
 
இருப்பினும் மருத்துவ குழுவினர் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கைக்கு பின்னர் கமல்ஹாசன் ரசிகர்கள் அவர் விரைவில் குணமாக வேண்டும் என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்