கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் இணைந்த இன்னொரு பிரபல நடிகர்

வெள்ளி, 19 நவம்பர் 2021 (18:36 IST)
கமல்ஹாசன் நடித்து வரும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு கோவையில் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
கோவை படப்பிடிப்பில் கமலஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் கலந்து கொண்டிருக்கும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி இந்த படத்தில் ஹரிஷ் பெராடி என்பவர் இணைந்து உள்ளதாகவும் அவரும் இன்றைய படப்பிடிப்பில் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது
 
ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் நடித்த கைதி திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் ஹரிஷ் பெராடி நடித்திருந்தார் என்பதும் அதே போல் விக்ரம் படத்தில் அவருக்கு ஒரு செம்மையான கேரக்டரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்