சென்னை உள்பட தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான வட மாநிலத்தவர்கள் பணிபுரிந்து வரும் நிலையில் அவர்கள் ஹோலி பண்டிகை கொண்டாட சொந்த ஊர் சொல்வதற்கு வசதியாக மூன்று சிறப்பு ரயில்களை ரயில்வே துறை அறிவித்துள்ளது. அந்த ரயில்கள் குறித்த முழு விவரங்கள் இதோ:
1. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இருந்து மார்ச் 8, 12 (சனிக்கிழமை, புதன்) ஆகிய தேதிகளில் இரவு 11.45 மணிக்கு (வாரம் இருமுறை சிறப்பு ரயில்-06077) புறப்பட்டு, 3-வது நாள் (முறையே திங்கள், வெள்ளிக்கிழமை) காலை 7.15 மணிக்கு மேற்குவங்கம் மாநிலம் சந்த்ரகாச்சிக்கு சென்றடையும்.
மறுமார்க்கமாக, சந்த்ரகாச்சியில் இருந்து மார்ச் 10, 14 ஆகிய தேதிகளில் (திங்கள், வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு சிறப்பு ரயில் (06078) புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 3.30 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும்.
2. போத்தனூரில் இருந்து மார்ச் 8, 15 ஆகிய தேதிகளில் (சனிக்கிழமை) முற்பகல் 11.45 மணிக்கு வாராந்திர சிறப்பு ரயில் (06055) புறப்பட்டு, திங்கள்கிழமை (3-வது நாள்) பிற்பகல் 2.30 மணிக்கு பீகார் மாநிலம் பாரெளனியை அடையும்.
மறுமார்க்கமாக, பாரெளனியில் இருந்து மார்ச் 11, 18 ஆகிய தேதிகளில் (செவ்வாய்க்கிழமை) இரவு 11.45 மணிக்கு வாராந்திர சிறப்பு ரயில் (06056) புறப்பட்டு, வெள்ளிக்கிழமை (4-வது நாள்) அதிகாலை 3.45 மணிக்கு போத்தனூரை அடையும்.
3. திருவனந்தபுரம் வடக்கு - ஹசரத் நிஜாமுதின் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில்களுக்கான டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.