நீங்க நல்லவரா? கெட்டவரா? 90 மணி நேரம் வேலை..? மாதவிடாய் காலங்களில் விடுமுறை! - L&T நிறுவனர் சுப்ரமணியன் அறிவிப்பு!

Prasanth Karthick

வெள்ளி, 7 மார்ச் 2025 (12:31 IST)

ஊழியர்கள் வாரம் 90 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என பேசி சர்ச்சையில் சிக்கிய எல் அண்ட் டி நிறுவனர் சுப்ரமணியன் தற்போது பெண்களுக்கு தனது நிறுவனத்தில் சில சலுகைகளை வழங்கியுள்ளார்.

 

எல் அண்ட் டி நிறுவனரான எஸ்.என்.சுப்ரமணியன் சமீபத்தில் ஒரு நேர்க்காணலில் பேசியபோது, ஊழியர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் வீடுகளில் இருந்து என்ன செய்யப்போகிறார்கள்? அவர்கள் வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை செய்யலாம் என பேசியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சுப்ரமணியன் கார்ப்பரேட் முதலாளித்துவ மனநிலையில் பேசுவதாக பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர்.

 

சமீபத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று அவர் கிரிக்கெட் மேட்ச் பார்க்க சென்றுவிட அதை பகிர்ந்து பலரும் ஞாயிற்றுக்கிழமையை வீண் செய்து விட்டீர்களே என கிண்டல் செய்து வந்தனர்.

 

இப்படி சர்ச்சையில் சிக்கிய எஸ்.என்.சுப்பிரமணியன் தற்போது தனது நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் மகளிர் தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட அவர், தனது நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஒருநாள் சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

 

இந்த அறிவிப்பு எல் அண்ட் டியின் குறிப்பிட்ட சில பிரிவுகளில் பணி புரியும் பெண்களுக்கு மட்டுமே என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த அறிவிப்புக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. அதேசமயம், தனியார் நிறுவனங்களான ஸ்விகி, ஸொமேட்டோ போன்றவற்றிலும், கேரளா, பீகார் போன்ற மாநிலங்களிலும் ஏற்கனவே மாதவிடாய் கால சம்பளத்துடன் கூடிய விடுப்பு நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்