சென்னையில் உள்ள எஸ்டிபிஐ அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீரென சோதனை மேற்கொள்வது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலைமையில், எஸ்டிபிஐ கட்சித் தொண்டர்கள் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு எதிராக கோஷமிட்டு வருவதால் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே, அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்களின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிற நிலையில், சென்னை மண்ணடி அருகே அமைந்துள்ள எஸ்டிபிஐ கட்சி அலுவலகத்திலும் இன்று திடீரென நான்கு வாகனங்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த தகவல் பரவியதும், அந்த பகுதியைச் சேர்ந்த எஸ்டிபிஐ கட்சித் தொண்டர்கள் ஏராளமாக கட்சி அலுவலகம் முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், சோதனை செய்த அதிகாரிகளை கண்டித்து அவர்கள் கோஷமிட்டனர். இதனால், அந்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.