ஊரடங்கை மீறாம கொண்டாடிக்கிறோம்! – ஜகா வாங்கிய இந்து அமைப்புகள்!

Webdunia
புதன், 19 ஆகஸ்ட் 2020 (10:36 IST)
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில் விதிகளை மீறாமல் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதாக இந்து அமைப்புகள் தெரிவித்துள்ளன.

கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்திக்கு சிலை வைத்து வழிபடுதல், ஊர்வலம் செல்லுதல் போன்றவற்றிற்கு தடை விதித்துள்ள தமிழக அரசு மக்கள் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தியை கொண்டாட அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் விநாயகர் சதுர்த்திக்கு தமிழக அரசு விதித்துள்ள தடையை நீக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையில் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு தமிழக அரசு எடுத்த முடிவு சரிதான் என கூறியுள்ள நீதிமன்றம், மனுவை திரும்ப பெறாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தது.

இந்நிலையில் விநாயகர் சிலை வைத்து வழிபட அனுமதிக்க பாஜக தலைவர் எல்.முருகன் முதல்வரை சந்தித்து கோரிக்கை விடுத்த நிலையில் இதுகுறித்த ஆலோசனை இன்று நடைபெற உள்ளது. இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் “விநாயகர் சிலை வைத்து வழிபடுவது இந்துக்களின் விருப்பமாக உள்ளது. அரசு அனுமதித்தால் ஊரடங்கு விதிகளை மீறாமல் விநாயகர் சதுர்த்தி விழாக்கள் நடத்தப்படும்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்