இன்னும் சில மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம்..!

Webdunia
வியாழன், 23 நவம்பர் 2023 (11:36 IST)
கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் வடமேற்கு பருவமழை காரணமாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. ஈரோடு கோவை ஆகிய பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் பல இடங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் சென்னை உள்பட 14 மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரத்தில் மிதமான மழை முதல் கனமழை வரையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை எடுத்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், கரூர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய 14 மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே 8  மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் ஜாக்கிரதையாக  வீடு திரும்ப அறிவுறுத்தப்படுகின்றனர்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்