அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மிக கனமழை: வானிலை எச்சரிக்கை..!

Webdunia
வியாழன், 23 நவம்பர் 2023 (07:52 IST)
அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள ஆறு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடகிழக்கு பருவமழை மற்றும் காற்றின் மேல் அடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

ஏற்கனவே ஒரு சில மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்பதும் தமிழகம் முழுவதும் இன்றும் நாளையும் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இன்று 6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. நீலகிரி, தேனி, கோவை, திண்டுக்கல், சிவகங்கை, மற்றும் புதுக்கோட்டை ஆகிய ஆறு மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த மூன்று மணி நேரத்தில் மேற்கண்ட ஆறு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்பதால் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்