சென்னையில் விடிய விடிய மழை.. அதிகாலையிலும் மழை.. ஆனால் விடுமுறை இல்லை..!

Webdunia
வியாழன், 23 நவம்பர் 2023 (07:48 IST)
சென்னையில் விடிய விடிய மழை பெய்து வந்த நிலையில் இன்று அதிகாலை முழுவதும் மழை பெய்து வருகிறது. ஆனால் அதே நேரத்தில் சென்னை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை என்று மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது  என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் சென்னையில் நேற்று விடிய விடிய மிதமான மழை பெய்த நிலையில் இன்று அதிகாலையிலும் மழை பெய்தது.

குறிப்பாக ஆயிரம் விளக்கு, ராயபுரம், நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், வில்லிவாக்கம், பெரம்பூர், வியாசர்பாடி ஜீவா, சென்ட்ரல் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

அதேபோல் தேனாம்பேட்டை, தியாகராய நகர், பாண்டி பஜார், அண்ணா சாலை, எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது

இந்த நிலையில் சென்னையின் பல இடங்களில் விடாமல் மழை பெய்து வந்தாலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்