மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் இழக்கும் அபாயம்: தமிழக சுகாதாரத்துறை அதிரடி முடிவு..!

Webdunia
திங்கள், 29 மே 2023 (16:20 IST)
தமிழகத்தில் ஏற்கனவே மூன்று மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் சில கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்ய வாய்ப்பு இருப்பதால் தமிழக சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
 
தமிழகத்தில் 3 மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில் தமிழக சுகாதாரத்துறை சில நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
 
குறிப்பாக மருத்துவக்கல்லூரிகளில் ஆதார் உடன் இணைந்த பயோமெட்ரிக் வருகை பதிவை உறுதி செய்யவும், காலி பேராசிரியர் பணியிடங்களை நிரப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
 
மேலும் தேசிய மருத்துவ ஆணையத்தை அணுகி 500 மருத்துவ இடங்களை தக்க வைக்கவும் தமிழக சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்