135 கார்டினல்களில் புதிய போப் ஆகப்போவது யார்? மே 7 தொடங்குகிறது மாநாடு!

Prasanth Karthick

செவ்வாய், 29 ஏப்ரல் 2025 (09:13 IST)

கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ் தனது 88வது வயதில் உடல்நலக்குறைவால் கடந்த 21ம் தேதியன்று காலமானார். அவரது உடல் ரோமில் அடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், திருச்சபையின் அடுத்த போப் யார் என்பது குறித்த கேள்விகளும் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.

 

போப் ஆண்டவருக்கு அடுத்தப்படியாக கத்தோலிக்க திருச்சபைகளில் அதிகாரம் பெற்றவர்களாக இருப்பவர்கள் கார்டினல்கள். உலகம் முழுவதும் 252 கார்டினல்கள் உள்ளனர். இவர்களில் 80 வயதிற்கு உட்பட்டவர்களே போப் பதவிக்கு தேர்வாக தகுதி வாய்ந்தவர்கள். தற்போது கார்டினல்களில் 135 பேர் தேர்வு செய்வதற்கும், வாக்களிப்பதற்கும் தகுதி வாய்ந்த கார்டினல்களாக உள்ளனர்.

 

இதில் சில கார்டினல்கள் சேர்ந்து ஒருவரை முன்மொழியவும் நிராகரிக்கவும் முடியும். இறுதி வாக்கெடுப்பில் அதிக ஆதரவை பெறும்  கார்டினல் போப்பாக பதவி ஏற்பார். தற்போது போப் பிரான்சிஸ் மறைவைத் தொடர்ந்து வாட்டிகனில் 9 நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. அதனால் மே 4ம் தேதி துக்க அனுசரிப்பு முடிந்து, மே 5ம் தேதி கார்டினல்கள் மாநாடு நடைபெற உள்ளது.

 

அதில் கார்டினல்கள் அனைவரும் ஒரு அறையில் விவாதத்தை தொடங்கி ஒருவரையொருவர் பேசி புரிந்து கொண்டபின் மாநாட்டை தொடங்குவார்கள் இதற்காக 7ம் தேதி வரை கான்கிளேவ் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்