தக்காளி விலை ஒரு கிலோ ரூ.10 தான்.. மக்கள் மகிழ்ச்சி.. விவசாயிகள் கவலை..!

Siva

செவ்வாய், 29 ஏப்ரல் 2025 (07:37 IST)
தக்காளி விலை கடந்த சில நாட்களாக வீழ்ச்சி அடைந்து கொண்டே வரும் நிலையில், தற்போது ஒரு கிலோ 10 ரூபாய் என விற்பனையாகி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து, அதிக தக்காளியை வாங்குகின்றனர். ஆனால் அதே நேரத்தில், தக்காளி விலை சரிவு காரணமாக விவசாயிகள் கடும் அதிருப்தி அடைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
தர்மபுரி, கிருஷ்ணகிரி, பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து வரும் தக்காளியின் அளவு அதிகரித்து வருவதாகவும், உள்ளூரில் இருந்து தக்காளிகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்து கொண்டிருப்பதாகவும், அதனால் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
 
25 கிலோ கொண்ட ஒரு தக்காளி பெட்டி 150 முதல் 200 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது என்றும், மொத்த விலையில் எட்டு ரூபாய்க்கு விற்பனை ஆகும் தக்காளி சில்லறை விலையில் பத்து ரூபாய் முதல் 12 ரூபாய் வரை விற்பனையாகி வருவதாகவும் தெரிகிறது. இதனால் பொதுமக்கள் அதிக அளவில் தக்காளியை வாங்கிக் கொண்டு செல்கின்றனர்.
 
வரும் நாட்களிலும் இதே வேலை நீடிக்கும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளதால், தக்காளி சாகுபடி செய்த விவசாயிகள் கவலை அடைந்தனர்.
 
ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னால் தக்காளி விலை ஒரு கிலோ 200 ரூபாய் என விற்பனையாகி வந்த நிலையில், தற்போது தக்காளி விலை வெறும் 10 ரூபாய் என விற்பனையாகி வருவது விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்